வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எல்லோருக்கும்15 லட்சம் கிடைச்சு பண்ணையாரா இருக்கோம்.
உங்களுக்கு வழி தெரியவில்லை. என்று ஒத்து கொள்ளுங்கள்... கட்சிக்காரங்கக்ளுக்கேய குடுத்த பொது மக்களுக்கு எப்போ குடுப்பிங்க ?
தமிழகத்தில் 5 லட்சம் பட்டாக்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 50 ஆயிரம் பட்டாக்கள் வழங்க உத்தரவிட்டுள்ளனர். இதை செயல்படுத்த மாவட்டத்தின் 11 தாலுகாக்களுக்கும் தலா ஆயிரம் பட்டாக்கள் என நிர்ணயித்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு தாலுகாவுக்கும் 3 ஆயிரம், 4 ஆயிரம் என உயர்த்தப்பட்டது.அவற்றை கடந்த மாதமே மதுரையில் விழா நடத்தி முதல்வர் வழங்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் நிகழ்ச்சி நடப்பது தள்ளிக் கொண்டே போனது. பட்ஜெட் கூட்டம், சித்திரைத் திருவிழா என காரணம் கூறப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்காமல் நெருக்கடி ஏற்படுத்தியதால் அந்தளவு எண்ணிக்கையில் பட்டாதாரர்களை தயார்படுத்த இயலவில்லை. இத்தனைக்கும் இந்தாண்டு இறுதிக்குள் 50 ஆயிரம் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்றுதான் அரசாணை உள்ளது. திருத்தப்பட்ட அரசாணை
இதுவரை கிராமப்புறங்களில்தான் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மாநகராட்சிகளில் 12 கி.மீ., மற்ற நகரங்களில் 8 கி.மீ.,க்கு பட்டா வழங்குவதில்லை. இதற்காகவே நகர்ப்பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்போருக்கும் பட்டா வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி நீர்நிலைகள் தவிர்த்த பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுவரி, குடிநீர் உட்பட வரிசெலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து தகுதியுள்ளோரை வருவாய்த் துறையினர் தேடி வந்தனர். நகர்ப்பகுதியில் ஒரு சென்ட், பிற பகுதியில் 1.5 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என உள்ளதால் வருவாய்த் துறையினரால் தகுதியுள்ளோரை கண்டறிவது 'குதிரைக் கொம்பாக' உள்ளது. இதுவரை 50 சதவீத அளவுக்கே தகுதியுள்ளோர் தேர்வாகி உள்ளனர். இதனால் பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி இல்லாமல், தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் மட்டுமே மதுரை யில் நடக்க உள்ளது. வருவாய்த்துறையினரின் புலம்பலுக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வேண்டும்.
எல்லோருக்கும்15 லட்சம் கிடைச்சு பண்ணையாரா இருக்கோம்.
உங்களுக்கு வழி தெரியவில்லை. என்று ஒத்து கொள்ளுங்கள்... கட்சிக்காரங்கக்ளுக்கேய குடுத்த பொது மக்களுக்கு எப்போ குடுப்பிங்க ?