உள்ளூர் செய்திகள்

வைகையில் தீ

சோழவந்தான் : சோழவந்தான் பத்மா கார்டன் அருகே வைகையாற்றங்கரையில் வளர்ந்துள்ள நாணலில் தீ பற்றி அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கும் பரவியது. தீயணைப்பு அலுவலர் நாகராஜன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். அவர்கள் கூறுகையில், ''கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள் போன்றவை ஆற்றுக்குள் வீசப்படுவதால் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. மக்கள் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை