போலீசாருக்கு முதலுதவி பயிற்சி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சப்டிவிசன் போலீசாருக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் துவக்கி வைத்தார். கூட்டத்தில் ஒருவர் மயங்கினால் அதற்கான காரணம், மாரடைப்பா என கண்டறியும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், பெண்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி வழங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை குறித்து விளக்கினர். உணவுக்குழாயில் உணவுப்பொருள் சிக்கிக்கொண்டால் எப்படி முதலுதவி அளிப்பது என்பது குறித்தும் விளக்கினர்.