ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி நண்பர்கள் பூப்பந்தாட்டக் கழகம் சார்பில் ஐவர் பூப்பந்தாட்டப்போட்டி நடந்தது. மதுரை பூப்பந்தாட்டக் கழகச் செயலாளர் செல்வராஜ், உசிலம்பட்டி நிர்வாகிகள் மாறன், நிஜாமுதீன்,குமரேசன் மற்றும் எஸ்.ஐ., பாண்டியம்மாள் ஞானவேல், ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் பங்கேற்றனர். மதுரை, சிவகங்கை, விருதுநகர்மாவட்டங்களின் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மதுரை கிங்ஸ்டார், செக்கானுாரணி நேதாஜி அணியினரும் மோதினர். கிங்ஸ்டார் அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணக்குமார் பரிசுக்கோப்பை வழங்கினர்.