மேலும் செய்திகள்
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
மதுரை: நாளை (அக்.20) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன்பாகவே பூக்களை வாங்கி வியாபாரிகள் 'இருப்பு' வைத்ததால் நேற்று (அக்.18) மல்லிகைப்பூக்கள் கிலோ ரூ.2000க்கு விற்கப்பட்டது. மதுரை மல்லிகை நேற்று காலையில் கிலோ ரூ.2500 ல் தொடங்கி மதியம் ரூ.2000 ஆக குறைந்தது. பிச்சி, கனகாம்பரம் கிலோ ரூ.1500, முல்லை 1400, அரளி 300, செவ்வந்தி, சம்பங்கி 150, செண்டுமல்லி 80, ரோஸ் 200, பட்டன் ரோஸ் 250, பன்னீர் ரோஸ் 300, கோழிக்கொண்டை 100, மரிக்கொழுந்து கிலோ ரூ.50, தாமரை ஒன்று ரூ.25க்கு விற்கப்பட்டது. தொடர் மழையால் பூக்கள் வரத்து குறைந்ததும் விலை கூடுதலுக்கு ஒரு காரணம் என்கிறார் மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்து. அவர் கூறியதாவது: சீசன் நேரத்தில் 8 முதல் 10 டன் வரை மல்லிகை கிடைக்கும். மழையால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது. பூக்களும் அளவில் சிறிதாக உள்ளது. மதுரையில் பாரபத்தி, கப்பலுார், திருமங்கலம், வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி, சோளங்குருணியிலும், நிலக்கோட்டை, காரியாபட்டியிலும் இருந்து வந்தாலும் தினமும் 2 டன் அளவை விட குறைவாகவே கிடைக்கிறது. வரத்து குறைந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வியாபாரிகள் வாங்கி இருப்பு வைக்கின்றனர். அதனால் விலையும் சற்று கூடுதலாகிறது. தை மாதம் வரை மல்லிகை வரத்து குறைவாக இருக்கும் என்றார்.
01-Oct-2025