எச்சரிக்கை இல்லாததால் அடிக்கடி விபத்து
பேரையூர்: பேரையூர் -- உசிலம்பட்டி சாலையில் 30க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. ஒவ்வொரு ஊர் கோயில் பள்ளி வளாகம் இருக்கும் இடங்களிலும் இரண்டு அல்லது மூன்று வேகத்தடைகள் உள்ளன. வேகத் தடைகளில் ஏறி இறங்குவதற்குள் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கிறது.இரவு நேரங்களில் டூவீலர் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கவனிக்காமல் இருந்தால் அவ்வளவுதான். பெரும்பாலான வேகத்தடைகளில் ஒளிரும் கோடுகள் இருப்பதில்லை. வெள்ளைக் கோடுகளும் இருப்பதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பாதிக்கப்படுகின்றனர்.வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதால் தேவையில்லாத வேகத்தடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களில் உள்ள வேகத் தடைகளில் வெள்ளைக் கோடுகளை இட வேண்டும். ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.