உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதி கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் கற்பக விநாயகர் சன்னதியில் உற்ஸவர் விநாயகர் சிலை, விளாச்சேரி குலாலர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட 2 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடந்தது. கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர், பெரிய வைரத்தேரில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை படைத்து தீபாராதனை காட்டினர். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் 5 நாட்களாக நடந்த லட்சார்ச்சனை, யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர், உற்ஸவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மாலையில் மூஷிக வாகனத்தில் சுவாமி உலா வந்தார். பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் ஆக. 26ல் துவங்கிய விநாயகர் சதுர்த்தி விழா, 108 சங்காபிஷேகம், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை அபிஷேகம், சிறப்பு பூஜை முடிந்து மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்துபடி செய்து தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். திருநகர் மருது பாண்டியர் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஆனந்த விநாயகர் மகளிர் சபா நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர். மகாலட்சுமி காலனி வர சித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை