உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையை உரமாக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு பின் முயற்சி

குப்பையை உரமாக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு பின் முயற்சி

உசிலம்பட்டி : உத்தப்பநாயக்கனுார் அருகே யு.வாடிப்பட்டி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நகராட்சி குப்பைக்கிடங்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.இங்கு குப்பையை மறு சுழற்சியாக உரமாக்கும் முயற்சி 3 ஆண்டுகளாக நடக்காததால் மலை போல் குவித்து வைத்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் பாதிக்கப்படும் மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். 2023 மார்ச்சில் குப்பைக்கிடங்கிற்கு பூட்டு போட்டனர். இதனால் தற்காலிகமாக பேரையூர் ரோட்டில் உள்ள மற்றொரு குப்பைக்கிடங்கில் குப்பையை சேகரித்தனர். இங்கும் உரமாக்கும் வசதிகள் இருந்தும் ஆள் பற்றாக்குறையால் தொடர்ந்து எரித்து வருகின்றனர். இங்கும் எதிர்ப்பு வருகிறது.தற்போது கமிஷனர் சக்திவேல் தலைமையில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் வார்டுகளில் குப்பை சேகரிக்கும் போதே மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து வாங்கும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மக்கும் குப்பையை மட்டும் 2 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் யு.வாடிப்பட்டி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு சென்று சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் உரமாக்கும் பணியை தொடர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை