பொதும்பு அரசு பள்ளி முன் குப்பை
அலங்காநல்லுார்: மதுரை மேற்கு ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி முன் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதலை மெயின் ரோட்டில் உள்ள பள்ளி முன்புள்ள காலி மனைகளில் கருவேலம் மரங்களும், மழை நீரும் சூழ்ந்துள்ளது. இந்த ரோட்டோர மழை நீரில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை தினமும் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குப்பை மேடாக காட்சி தரும் பகுதியில் கால்நடைகளும் மேய்ச்சலுக்கு விடப்படுகிறது. அவற்றின் கழிவுகளால் சுகாதாரம் பாதிக்கிறது. கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பையை ஒன்றிய நிர்வாகம் அகற்ற வேண்டும். மேலும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.