மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
மதுரை : மதுரையில் தனபால் மேல்நிலைப் பள்ளியில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் கள்ளர் சீரமைப்பு மாணவர்கள் நலனுக்கான மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தலைவர் டேவிட்ஆழ்வார் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜெயசந்திரன் வரவேற்றார். மாநில சட்ட செயலாளர் பாலமுருகபாண்டியன், மாநில ஆலோசகர் தனபால் ஜெயராஜ், துணைச் செயலாளர் அந்தோணி ஜெயபிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீர்மானங்களை விளக்கி பாலமுருகபாண்டியன் பேசினார். நிர்வாகிகள் தியாகராஜன், ஜான் பாக்கியராஜ், ராஜன், விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிதாக நியமிக்கப்படவுள்ள 18 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் உத்தரவு விரைவில் வழங்க வேண்டும். காலியாக உள்ள இடைநிலை, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுதிகளில் காப்பாளராக மாற்றுப்பணியில் சென்றுள்ள ஆசிரியர்களை மாணவர்கள் நலன் கருதி அவர்களை பள்ளிகளுக்கு உடன் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
05-Sep-2025
16-Aug-2025