மேலும் செய்திகள்
இலவச தொழில் பயிற்சி
04-Nov-2025
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் இளைஞர்களுக்கு கட்டண பயிற்சிகளை அறிவித்து உள்ளது. நவ.10 முதல் 21 வரை நடக்கும் தங்க நகை மதிப்பீடு பயிற்சிக்கான கட்டணம் ரூ.7375. டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( நவ.15,16) பயிற்சிக்கு கட்டணம் ரூ.3540. சிறுதானிய பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (நவ.15,16, 22,23) கட்டணம் ரூ.4500. தினமும் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி நடைபெறும். 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு படித்த இருபாலரும் பங்கேற்கலாம். முன்பதிவிற்கு 86956 46417, 86670 65048.
04-Nov-2025