உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி ...மீண்டு(ம்) வரணும்: ஏற்கனவே திட்டமிட்டு கிடப்பில் உள்ளது.

மதுரையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி ...மீண்டு(ம்) வரணும்: ஏற்கனவே திட்டமிட்டு கிடப்பில் உள்ளது.

மதுரை: மதுரை தோப்பூரில் 2016-17 ல் அரசு பல் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லுாரி செயல்படுகிறது. கடலுார் பல் மருத்துவக் கல்லுாரி அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டது. மூன்றாவதாக புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லுாரி சமீபத்தில் துவங்கப்பட்டது.

மறக்கப்பட்ட மதுரை

மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி சார்பில் தோப்பூர் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் பல் மருத்துவக்கல்லுாரி அமைக்க 2016 - 17 ல் டீன் மூலம் மருத்துவ கல்வி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் முன்னேற்பாடுகள் நடந்த நிலையில் அத்திட் டம் கிடப்பில் போடப்பட்டது. அடுத்ததாக திட்டமிடப்பட்ட விருதுநகர் அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் கிடப்பில் போடப்பட்டது.

விழிப்புணர்வு குறைவு

அரசு தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவத்திற்கு அதிநவீன வசதிகள் இல்லை. கிராமப்புற மக்களுக்கு பற்களின் சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தோப்பூரில் பல் மருத்துவக் கல்லுாரி துவங்கினால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட பல் சிகிச்சை கிடைக்கும். மருத்துவக் கல்லுாரி துவங்கப்பட்டால் வாய், மூக்கு அறுவை சிகிச்சை, பல் அடைத்தல், ஈறுநோய் பிரிவு, பல் கிளிப் பிரிவு, குழந்தைகள் பல் மருத்துவம், வாய் நோய் அறிதல், பொதுபல் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு முறை, வேர் சிகிச்சை என பல்வேறு பிரிவுகளின் கீழ் சிகிச்சை அளிக்க முடியும். வாய் புற்றுநோயைகூட கண்டறிந்து குணப் படுத்தலாம். பல் மருத்துவத்திற்கு வெளிநாட்டினரும் சிகிச்சை பெறலாம். விளையாட்டு வீரர்கள் அடிபடும் போது அவர்களுக்கான தனிப்பிரிவும் செயல்படுத்தலாம். தடயஅறிவியல் துறையைப் போல, பல் மருத்துவ தடய அறிவியல் பிரிவு துறையை தனியாக உருவாக்கி குற்ற நிகழ்வுகளுக்கான முக்கிய தடயமாக பல் பிரிவை கொண்டு வரலாம். தோப்பூரில் போதுமான இடவசதி உள்ளது. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி அரசு பல் மருத்துவக் கல்லுாரியை கொண்டு வர மருத்துவ கல்வி இயக்குனரகம் மூலம் டென்டல் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு விண்ணப்பிக்க அரசு முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ