உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா

அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா

மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நேற்று துவங்கியது.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைத்துள்ள சரண்விடுப்பை மீண்டும் வழங்குவது மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா துவங்கியது.மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக பந்தல் அமைத்து திரளான பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அமர்ந்திருந்தனர். மாவட்ட தலைவர் தமிழ் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் சந்திரபாண்டி, மகேந்திரன், இணைச் செயலாளர்கள் பெரியகருப்பன், ராம்குமார் முன்னிலை வகித்தனர். மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ரம்யா வரவேற்றார். முன்னாள் பொதுச் செயலாளர் செல்வம் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எம்.பி. முருகையன், ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளர் நவநீதகிருஷ்ணன், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.ஒரு நாள் (24 மணி நேரம்) முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாலையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தவர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கினர். இன்று காலை 10:00 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வருகிறது. இப்போராட்டத்தால் வருவாய், ஊரக வளர்ச்சி, சமூகநலம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, கூட்டுறவு உட்பட பல துறைகளில் பணிகள் பாதித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை