உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாலமேடு : ''தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, மதுரை மாவட்டம் பாலமேட்டில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக் பள்ளி 35வது ஆண்டு விழா இந்து நாடார்கள் உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்தது. பள்ளி தலைவர் கரிகாலன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரவி பிரியா வரவேற்றார். கவர்னர் தமிழிசை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.பின் அவர் கூறியதாவது: கல்வி தான் அடிப்படை. பல நேரங்களில் கல்வியை அரசியலாக்குவது வருத்தமளிக்கிறது. ஒன்று மொழிப்பாடம், தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கிறார்கள் என்று சொல்வது ஒத்துக்கொள்ள முடியாது. தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறதா, இல்லையா என்பதை தமிழக ஆட்சியாளர்கள் கூற வேண்டும். மற்றொரு மொழியை படிக்கும் போது குழந்தைகளுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் ஏன் வஞ்சிக்கப்படுகிறார்கள். புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை தான் ஊக்கப்படுத்துகிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் 20 ஆண்டுகளாக கல்வியை மாநில பாடத்திட்டத்திற்கு கொண்டுவரவோ, எய்ம்ஸ் கொண்டுவரவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மதுரையில் உள்ள எம்.பி., எய்ம்ஸ் எங்கே என வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் ராமநாதபுரத்தில் 3ம் ஆண்டு படித்து வருகின்றனர். அவர்கள் மருத்துவ பயிற்சியை மதுரை 'எய்ம்ஸ்'சில் மேற்கொள்வார்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !