திருமங்கலத்தில் சொத்துக்காக பாட்டி மீது தாக்குதல்
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா தங்களாச்சேரி நல்லுசாமி மனைவி ஆதம்மாள் 72. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆதம்மாளுக்கு 2 ஏக்கர்நிலமும் ஒரு வீடும் உள்ளது. மகன் முத்தையாவின்மகன் அரவிந்த் 28, சொத்தை பிரித்து தர கேட்டு கட்டையால் தாக்கியதில் ஆதம்மாள் கைகள் காயமுற்றன. இரு கைகளிலும் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், தன்னை கருணை கொலைசெய்து விடுமாறுஅழுதார். போலீசார் விசாரிக்கின்றனர்.