மேலும் செய்திகள்
காவலர் குறைதீர் முகாம் 62 பேர் கமிஷனரிடம் மனு
21-May-2025
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது. மண்டல தலைவர் வாசுகி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 32 மனுக்கள் அளிக்கப்பட்டன. வீட்டு கதவு எண் மாற்றம் கோரிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிற மனுக்கள் மீது அடுத்த மண்டல கூட்டத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. துணை மேயர் நாகராஜன், துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், நகர்நல அலுவலர் இந்திரா, உதவி கமிஷனர் மணியன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் முகம்மது பாரூக், கண்காணிப்பாளர் மரகதவல்லி பங்கேற்றனர்.ஒவ்வொரு கூட்டத்திலும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மக்கள் தொடர்ந்து மனு அளித்தாலும் நடவடிக்கை இருப்பதில்லை. தெரு விளக்குகள் வசதி கோரியும் இம்மண்டல மக்கள் தொடர்ந்து மனுக்கள் அளிக்கின்றனர். இதுகுறித்து மண்டல தலைவர் வாசுகி கூறுகையில், ஒவ்வொரு வார்டிலும் 200 தெரு விளக்குகள் தேவையாக உள்ளன. மாநகராட்சி கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். மின்கம்பம் அமைக்க மின்வாரியத்திற்கு மாநகராட்சி கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் செலுத்தப்படவில்லை. இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
21-May-2025