குண்டாறு வடிநில கோட்ட அலுவலகம் ஜப்தி
மதுரை : மதுரை நிலையூர் வாய்க்கால் பணிக்கான காரைக்குடியைச் சேர்ந்த ராஜ மாதவ கலாநிதியின் 30 சென்ட் நிலத்தை கையகப்படுத்தியதற்கான கூடுதல் தொகையை இழப்பீடாக வழங்கவில்லை என்பதால் மதுரை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி தல்லாகுளம் குண்டாறு வடிநில கோட்ட அலுவலகம் நேற்று ஜப்தி செய்யப்பட்டது. ராஜமாதவ கலாநதி, வக்கீல் சுந்தரபாண்டி கூறியது: இழப்பீடாக ரூ.77 ஆயிரம் முதலில் வழங்கப்பட்டது. இந்த தொகை குறைவு என்பதால் கூடுதல் இழப்பீடு கேட்டு முறையிட்ட போது ரூ.6.75 லட்சம் தர குண்டாறு வடிநில கோட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர். இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது 2023ல் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. தற்போது வரை இழப்பீடு தொகை தராததால் நீதிமன்ற உத்தரவுபடி அலுவலகத்தில் இருந்த மர நாற்காலி, மேஜை பிற பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன என்றார். செயற்பொறியாளர் நிறைமதி ஓய்வுக்கு பின் தற்போது கூடுதல் பொறுப்பில் உள்ள மலர்விழி, சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கு சென்றுள்ளார். அதனால் அடுத்த நிலை அதிகாரிகள், புகார்தாரரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இழப்பீட்டுத்தொகை தந்தால் பொருட்களை ஒப்படைப்பதாக அவர் தெரிவித்தார்.