மேலும் செய்திகள்
டோல்கேட்டை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
27-Jul-2025
மதுரை : மின்வாரிய உதவி பொறியாளர்கள் நியமன தேர்வில் எவ்வித குறைபாடும் இல்லை என குழு அறிக்கை அளித்துள்ளதால் அதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை பரணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக மின் வாரியத்தில் 325 உதவி பொறியாளர்கள் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 2018 டிச., 30 ல் நடந்தது. சென்னை அண்ணா பல்கலை தேர்வை நடத்தியது. வினாத்தாள் வெளியானதாக சர்ச்சை எழுந்தது. சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அண்ணா பல்கலை விசாரணை நடத்தியது. பின் அரசின் இணையதளத்தில் வினாத்தாள், கீ பதில்களுடன் தேர்வு முடிவுகள் வெளியாகின. 1575 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்த வேண்டும். தேர்வு மற்றும் நியமன நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'அரசு ஒரு குழு அமைத்து விசாரித்தது. அது, 'தேர்வு வெளிப்படையாக நடந்தது. அதில் எவ்வித குறைபாடும் இல்லை,' என அறிக்கை சமர்ப்பித்தது. தேர்வு மற்றும் நியமன நடைமுறைகள் முடிந்து விட்டன. தேர்வு செய்யப்பட்டோர் பணியில் சேர்ந்து விட்டனர். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என்றனர்.
27-Jul-2025