உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆதாரமின்றி பொதுநல வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஆதாரமின்றி பொதுநல வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத குவாரி நடப்பதாக ஆதாரமின்றி தாக்கல் செய்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திருநெல்வேலி தாழையூத்து சேர்மக்கனி தாக்கல் செய்த பொதுநல மனு: சேதுராயன்புதுார், ராமயன்பட்டியில் ஒரு நிறுவனம் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கிறது. அதை நிறுத்த வேண்டும். வெட்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களை எடைபோட வேண்டும். முறையான போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் இல்லாமல் வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. குத்தகை அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் கனிமம் வெட்டி எடுக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என கனிமவளத்துறை இயக்குனர், உதவி இயக்குனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு: சட்டவிரோத குவாரி தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் வெறும் கருத்து அடிப்படையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றத்தை நாட முடியாது. இதனால் இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நாங்கள் விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !