உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குவாரிகளின் ஆய்வறிக்கை தேவை; உயர்நீதிமன்றம் உத்தரவு

குவாரிகளின் ஆய்வறிக்கை தேவை; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகளில் விதிமீறல் தொடர்பாக 'ட்ரோன்'கள் மூலம் ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

புளியரையை சேர்ந்த ஜமீன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போலி ஆவணம் மூலம் சட்டவிரோதமாக கனரக வாகனங்களில் கனிமவளங்கள் கடத்தப்படுகிறது. தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தென்காசி மாவட்டத்திலிருந்து அதிக கனிமங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குவாரிகளில் விதிகளை மீறி அதிக ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளில் விதிமீறல் தொடர்பாக 'ட்ரோன்' கேமரா மூலம் ஆய்வு செய்யக்கோரி தமிழக கனிம வளத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரபுராஜதுரை ஆஜரானார். அரசு தரப்பு, 'மாவட்டத்தில் 45 கல்குவாரிகள் உள்ளன. அவற்றில் 17 குவாரிகளில் ஆய்வு பணி முடிந்துள்ளன. அனைத்து கல்குவாரிகளையும் அளவீடு செய்ய 4 வாரம் அவகாசம் தேவை' என தெரிவித்தது. நீதிபதிகள், '17 குவாரிகள் தொடர்பான அறிக்கையை செப்.9ல் தாக்கல் செய்ய வேண்டும். மற்ற குவாரிகளை 4 வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை