உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தென்காசி கலெக்டர் அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்

 தென்காசி கலெக்டர் அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை: தென்காசி புது கலெக்டர் அலுவலக கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் ஆவுடையானுார் உதயசூரியன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தென்காசி மாவட்டம் 2019 ல் உருவாக்கப்பட்டது. அரசுத்துறையின் அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. தென்காசியில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ.119 கோடியில் கட்டுமான பணி 2020 ல் துவங்கியது. 2021 ல் 90 சதவீதம் நிறைவடைந்தது. கட்டுமானத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை; விதி மீறல் உள்ளது என ஏற்கனவே ஒரு பொது நல வழக்கு தாக்கலானது. தடையில்லா சான்று கோரி பொதுப்பணித்துறை சமர்ப்பித்த மனுவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் பைசல் செய்ய உயர்நீதிமன்றம் 2022 ல் உத்தரவிட்டது. இதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிறைவேற்றவில்லை. பொதுப்பணித்துறையும் வலியுறுத்தவில்லை. இதன் மூலம் மாநில அரசுக்கு நிதி இழப்பை ஏற் படுத்தியுள்ளனர். புது கட்டடம் பயன்படுத்தப்படாததால் சேதமடைந்து வருகிறது. அரசின் சேவைகளை பெற வெவ்வேறு வாடகை கட்டடங்களில் செயல்படும் துறை அலுவலகங்களுக்கு சென்று வருவதில் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். புது கலெக்டர் அலுவலக கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தேசிகன் ஆஜரானார். நீதிபதிகள் வருவாய்த்துறை முதன்மை செயலர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர்கள், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.17 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை