உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உயர்கல்வி விழிப்புணர்வு

 உயர்கல்வி விழிப்புணர்வு

மதுரை: மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமையில் நடந்தது. உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், அல்ஹாஜ் முகமது முன்னிலை வகித்தனர். நேர மேலாண்மை, திறன் மேம்பாடு, உயர்கல்வி நிறுவனங்கள் படிப்புகள் குறித்து திருக்கோஷ்டியூர் மணிகண்டன் பேசினார். மாணவர் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு நகர் துணைத் தலைவர் முகமது அலி, இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெஸ்டின், செயலாளர் டேவிட் ராஜதுரை, ஆசிரியர் தமிழ்க் குமரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !