உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எச்.எம்.எஸ்., சங்க கூட்டம்

எச்.எம்.எஸ்., சங்க கூட்டம்

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க மண்டல கூட்டம் தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது. பொருளாளர் ஒச்சாத்தேவன், ஆலோசகர்கள் சவுந்தரராஜன், சேதுராமன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஷாஜகான் தீர்மானங்களை விளக்கினார்.பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து மத்திய மாநில அரசுகள், சங்கங்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். பென்சன் தொகையில், 70 வயதான ஊழியர்களுக்கு 10 சதவீதமும், 80 வயதானவர்களுக்கு 15 சதவீதமும் உயர்த்தி வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக பணப்பலன்கள் பெறாதவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். 53 சதவீதம் அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை