உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாறுநாள் வேலைத்திட்ட முறைகேடு: ஏ.பி.டி.ஓ., உட்பட இருவர் பணி நீக்கம் வாடிப்பட்டி பி.டி.ஓ., உட்பட மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை

நுாறுநாள் வேலைத்திட்ட முறைகேடு: ஏ.பி.டி.ஓ., உட்பட இருவர் பணி நீக்கம் வாடிப்பட்டி பி.டி.ஓ., உட்பட மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளில் முறைகேடு காரணமாக ஏ.பி.டி.ஓ., கனிச்செல்வி, ஊராட்சி செயலர் செல்வம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பி.டி.ஓ., கிருஷ்ணவேணி உட்பட மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வாடிப்பட்டி ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சி சின்னமநாயக்கன்பட்டியில் வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்தன. நுாறுநாள் வேலை திட்டத்தில் இப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இப்பணிகளில் பணிக்கு வராதவர்கள் வந்ததாகவும், வராத பயனாளியின் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை பயன்படுத்தி பணம் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தன.உதவித் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். புகார்கள் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டது. காரணமானோர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. கலெக்டர் சங்கீதா விசாரித்து, முறைகேடுகளை கண்காணிக்க தவறியதாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனிச்செல்வி, ஊராட்சி செயலர் செல்வம் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.இப்பிரச்னைகளில் தொடர்புடைய பி.டி.ஓ., கிருஷ்ணவேணி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் (ஓவர்சீயர்) சிவரஞ்சித், ரஞ்சிதம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அவர்களிடம் விளக்கம் கேட்டு '17 பி' எனும் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை