மேலும் செய்திகள்
சத்தியமங்கலம் சாலை சேதம் சீரமைக்க வேண்டுகோள்
21-Oct-2024
சீயமங்கலம் காலனியில் ரேஷன் கடை வருமா?
17-Nov-2024
கொட்டாம்பட்டி: புளியமங்கலம் பகுதியில் தார் ரோடு அமைக்கப்பட்ட ஒரே நாளில் தொட்டாலே பெயர்வதால் ரோட்டின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.நேற்று முன்தினம் புளியமங்கலம் -மேட்டுக்கடை வரை குறிப்பிட்ட பகுதிக்கு தார் ரோடு அமைத்தனர். நேற்று மக்கள் சென்ற போது ரோட்டின் கனம் குறைவாகவும், வெடிப்பும் ஏற்பட்டிருக்கவே அதிர்ச்சியுற்றனர். மேலும் கையால் அழுத்தியபோது ரோடு பெயர்ந்தது. ரோடு பணி குறித்து தகவல் பலகை வைக்காததும் தெரிய வந்தது. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படும் ரோடு தரமான முறையில் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.பி.டி.ஓ., ராமமூர்த்தி கூறுகையில், ஒப்பந்ததாரர் மூலம் தரமான ரோடு அமைக்கப்படும் என்றார்.
21-Oct-2024
17-Nov-2024