மேலும் செய்திகள்
கால்நடை துறை அதிகாரிகள் இடமாற்றம்
31-Oct-2025
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள நபார்டு மாபிப் நிறுவனம் சார்பில் தொழில்துறை முன்னேற்றம் குறித்த கருத்தரங்கு நடந்தது. திருநெல்வேலி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு மைய உதவி இயக்குநர் சிமியோன் வரவேற்றார். தமிழகம், புதுச்சேரி இணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி துவக்கி வைத்தார். சி.ஐ.ஐ. மதுரை ஸ்டார்ட்அப் தலைவர் சுப்ரமணியன் புதுமைத்தொழில்கள், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். எம்.எஸ்.எம்.இ., துணை இயக்குநர் (டில்லி) ராமகிருஷ்ணன், மதுரை ஜி.எஸ்.டி., அலுவலக துணை கமிஷனர் ஷாலினி சுஷ்மிதா, மடீட்சியா முன்னாள் தலைவர் சம்பத், சிட்பி வங்கி உதவிப்பொது மேலாளர் பைடா ராமகிருஷ்ணா, கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க த் தலைவர் ரகுநாதராஜா குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.,) செலவு, போட்டி, சவால், வளர்ச்சி வாய்ப்பு குறித்து பேசினர். மதுரை உதவி இயக்குநர் உமா சந்திரிகா நன்றி கூறினார்.
31-Oct-2025