உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கண்மாயை ஆயக்கட்டில் சேர்க்க வலியுறுத்தல்

 கண்மாயை ஆயக்கட்டில் சேர்க்க வலியுறுத்தல்

சோழவந்தான்: சோழவந்தான் முதலைக்குளம் கண்மாயை ஆயக்கட்டில் சேர்த்து நிரந்தர பாசனக் கண்மாயாக மாற்ற வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயி ஜெயம் கூறியதாவது: முதலைக்குளத்தில் இருந்து கல்புளிச்சான்பட்டி செல்லும் வழியில் 300 ஏக்கருக்கும் மேலான பரப்புள்ள கண்மாய் உள்ளது. இதன் மூலம் நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, பூசாரிபட்டி வட்டாரத்தில் 600 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. அணைப்பட்டியில் இருந்து வரும் திருமங்கலம் கால்வாயில் பிரிந்து செல்லும் விரிவாக்க கால்வாயின் மூலம் இதற்கு தண்ணீர் கிடைக்கிறது. இப்பகுதியை ஆயக்கட்டில் சேர்க்காததால் உபரி நீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பருவமழையையே நம்பியுள்ளனர். மழைப்பொழிவு இல்லாத காலங்களில் பயிர் வளர்ச்சி பாதிக்கிறது.விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். இதனை தவிர்க்க கண்மாயை ஆயக்கட்டில் சேர்த்து நிரந்தர பாசன கண்மாயாக அறிவித்து தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ