உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒருங்கிணைந்த கல்வி திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த கல்வி திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் அனைத்து பணியாளர்கள் சார்பில் சம்பளம் வழங்க கோரி சி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு நிதி கிடைக்காததால் மாநில அரசால் சம்பளம் வழங்க முடியவில்லை எனக் கூறி செப்டம்பர் மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதில் மதுரையில் 600க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். விரைவில் சம்பளம் வழங்க கோரி வலியுறுத்தப்பட்டது.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் செந்தில்வேல் குமரன் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சங்க மகளிரணி பொருளாளர் நந்தினி முன்னிலை வகித்தார்.மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், பொருளாளர் சரவணமுருகன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.ஆசிரியர் பயிற்றுநர்கள், உதவி திட்ட அலுவலர்கள், சிறப்பாசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், கணக்காளர்கள், கட்டடப் பொறியாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், இயன்முறை மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை