வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெண்கள் மசக்கையாக இருக்கும்போது ஏற்படும் தலைசுற்றலை கண்டுபிடிக்குமா ????
மதுரை : விழிகளின் அசைவில் தலைச்சுற்றலை கண்டறிந்து, வீடியோவில் வரைபடமாக தெரிவிக்கும் வி.என்.ஜி., - வீடியோ நிஸ்டாக்மோ கிராபி, கருவி மதுரை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.இதுகுறித்து, டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது: பொதுவாக காதின் உட்பகுதியில் உள்ள சமநிலை அமைப்பில் ஏற்படும் சிக்கலால் தலைச்சுற்றல் உண்டாகலாம். காதின் உட்பகுதி சமநிலை அமைப்பானது உடலின் சமநிலையையும் நிலையான தகவல்களையும் பராமரிக்க உதவுகிறது. வி.என்.ஜி., பரிசோதனை என்பது விழிகளின் இயல்பான அசைவுகளை பின்தொடரும் முறை. வலது, இடது என எந்த பகுதியில் தலைச்சுற்றல் வருகிறதோ, கண்ணிலும் அதே பகுதியில் எதிரொலிக்கும். கண்ணாடி போன்ற கருவியை நோயாளி அணிந்து கொண்டால், அவரது தலைசாய்வு மாற்றங்களுக்கு ஏற்ப விழிகளின் அசைவும் மாற்றத்திற்குள்ளாகி வீடியோ முறையில் வரைபடமாக தெரியும். இதன் வாயிலாக சமநிலை அமைப்பின் சிக்கல்களை பரிசோதிக்க முடிவதால், முறையான சிகிச்சை அளிப்பதோடு மீண்டும் தலைச்சுற்றல் வராமல் குறைக்கவும் இக்கருவி உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் மசக்கையாக இருக்கும்போது ஏற்படும் தலைசுற்றலை கண்டுபிடிக்குமா ????