உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொஞ்ச நேரம்தான் கொட்டி தீர்த்தது மழை வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

கொஞ்ச நேரம்தான் கொட்டி தீர்த்தது மழை வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

மதுரை: மதுரையில் நேற்று மதியம் 3:00 மணி முதல் 3:15 மணி வரை திடீரென கொட்டிய கனமழையால் மகாத்மா காந்தி நகர் உட்பட புறநகர் பகுதி குடியிருப்புகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தது.இப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியதற்கான காரணங்களை வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது: இப்பகுதிகளில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ஆனையூர், கோசாகுளம், முடக்கத்தான், ஆலங்குளம் நீர்ப்பாசன கண்மாய்கள் உள்ளன. அனைத்து கண்மாய்களிலும் கரைகள் பலப்படுத்தப்பட்டு வாய்க்கால்கள் பராமரிக்கப்பட்டதால் அடுத்தடுத்த கண்மாய்களில் நீர் நிறைந்து கடைசியாக செல்லுார் கண்மாயை சென்றடைகிறது.ஆலங்குளம் கண்மாய் கரையைச் சுற்றி குடியிருப்புகள் பெருகியுள்ளன. மாநகராட்சியில் இந்த விரிவாக்க பகுதி சேர்க்கப்பட்ட நிலையில் பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டும், குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி நகரிலுள்ள தாமரை மலர் வீதி, சி.எஸ்.ஐ., தெரு உட்பட நிறைய தெருக்கள் பள்ளத்தில் உள்ளன. பாதாள சாக்கடை பணிகள் இன்னும் முழுமையடைந்து இணைப்பு கொடுக்காத நிலையில் ஏதோ ஒரு மேன்ஹோல் வழியாக மழைநீர் நிறைந்து வெளியேற முடியாமல் தெருவில் தேங்கியது. கடந்த மூன்று நாட்களாக மழையின் போது தண்ணீர் தேங்குவதும் வடிவதுமாக இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர். மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்து விடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி