உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஓராண்டாகியும் விடியல் இல்லை

 ஓராண்டாகியும் விடியல் இல்லை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சியில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. திருமங்கலம்- - பள்ளப்பட்டி ரோட்டில் மயானத்தின் அருகே ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. பல நாட்களாக பயன்பாடற்று இருப்பதால் சுற்றிலும் செடி, கொடிகள் முளைத்து புதர் போன்று காட்சியளிக்கிறது. மேலும் கதவுகள் துருப்பிடித்தும், கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன. திறப்பு விழா காணும் முன் மூடு விழா கண்டுவிடும் நிலை உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ