உள்ளூர் செய்திகள்

ஜெயந்தி விழா

மதுரை, : மதுரை எஸ்.எஸ்.காலனி மஹா பெரியவர் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி முக்தி அடைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் 91வது ஜெயந்தி விழா, தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடந்தது. மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தையர் பேசுகையில், ''ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,'ஜனக்கல்யாண்' என்கிற அமைப்பின் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம், நலன், முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அயோத்தியில் ராமர் கோயில் அமைய உழைத்தவர். அவர் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் மரியாதை'' என்றார். மாநிலச்செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை