ஆக.1ல் காஞ்சி பக்தர்கள் குரு தட்சணை விழா
மதுரை: காஞ்சி காமகோடி மடத்தின் பக்தர்கள் ஆண்டுதோறும் குரு தட்சணை எனப்படும் 'பிக் ஷா வந்தனம்' செலுத்துவது வழக்கம். சங்கராச்சாரியார் சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு தங்கியிருக்கும் ஊர்களுக்கு பக்தர்கள் சென்று குரு தட்சணை வழங்குவர். இந்த ஆண்டு காஞ்சி சுவாமிகள் இருவரும் திருப்பதியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்கின்றனர். அங்கு மதுரை பக்தர்கள் ஆக.1 சென்று தட்சணை வழங்க உள்ளனர். இதில் நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தை 0452 253 5455, 80721 32221 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். வேறு எந்த தனி நபரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் என்று காஞ்சி மடத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.