உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிடா முட்டு போட்டி

கிடா முட்டு போட்டி

எழுமலை: எழுமலை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டி அகோர ஆண்டிச்சித்தர் கோயிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து குரும்பை, வெள்ளை, செவளை, கொங்கு உள்ளிட்ட பிரிவுகளில் 46 ஜோடி கிடாக்கள் வயதுக்கேற்ப பிரித்து முட்டுக்கு விட்டனர்.அதிக முட்டுகள் முட்டிக்கொண்ட ஜோடிகளுக்கும், வெற்றி பெற்ற கிடாக்களுக்கும் பித்தளை, சில்வர் அண்டாக்கள், சேர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கினர். எழுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை