மேலும் செய்திகள்
மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு
19-Mar-2025
மதுரை: பாரம்பரிய கிடாமுட்டுவோர் நலச் சங்கம் தலைவர் பிரகாஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தேனி மாவட்டம் கூடலுாரில் கோயில் திருவிழாவையொட்டி ஏப்.9 ல் கிடாமுட்டு போட்டி அரசின் வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. அனுமதி, பாதுகாப்பு வழங்கக்கோரி கூடலுார் வடக்கு போலீசாரிடம் மனு அளித்தோம். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகக்கூறி நிராகரித்தனர். அதை ரத்து செய்து போட்டி நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நிபந்தனைகளுக்குட்பட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
19-Mar-2025