ஆக.16,17ல் கிருஷ்ண ஜெயந்தி
மதுரை : மதுரை இஸ்கான் சார்பில் திருப்பாலை கிருஷ்ண பலராமர் கோயிலில் ஆக.,16,17ல் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை அபிஷேகம், ஆராதனை, பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.