உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனுாரில் கும்பாபிஷேகம்

தேனுாரில் கும்பாபிஷேகம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தேனுாரில் உலக்குடி சோணைச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அக்.25 சனியன்று முதல் கால யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது. கணபதி, லட்சுமி, சுதர்சன ஹோமம், யந்திர பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று (அக்.26) திருமுறை பாராயணத்துடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. பின் கடம் புறப்பாடாகி காலை 11:15 மணி அளவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. சோணைச்சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. சோணைச்சாமி வகையறாக்கள் ஏற்பாடுகளைச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை