உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

அலங்காநல்லுார்:அ.புதுப்பட்டியில் ராமகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செல்வ விநாயகர், பாலமுருகன், பட்டீஸ்வரர், பலி பீடம், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கால பைரவர், நவகிரகங்கள் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை அகமுடையார் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர். அலங்காநல்லுார் அருகே சின்ன இலந்தைகுளத்தில் பூங்குத்தி ஆதி அமரடக்கி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீதர் அய்யர் தலைமையில் பூர்ணகலா புஷ்பகலா சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பாலமேடு அருகே கோணப்பட்டி கிழக்குத் தெரு பகவதி அம்மன், கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.,21ல் அழகர்கோவில் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். 28ல் பக்தர்கள் காப்பு விரதம் துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை