மேலும் செய்திகள்
காற்றாலை மின் உற்பத்தி இந்தியா மூன்றாம் இடம்
09-Apr-2025
மதுரை: பிரதமர் மோடி தலைமையில் காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.,) புதிய சாதனை படைத்துள்ளதாக ஆணையத்தலைவர் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக கே.வி.ஐ.சி., யின் 'டர்ன் ஓவர்' ரூ.ஒரு லட்சத்து 70ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 11 ஆண்டுகளில் உற்பத்தி 347 சதவீதமும் விற்பனை 447 சதவீதமும் வேலை வாய்ப்பு 49.23 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 - 14 ம் ஆண்டில் காதி துணிகளுக்கான உற்பத்தி ரூ.811 கோடியாகவும் விற்பனை ரூ.1081 கோடியாகவும் இருந்தது. 2024 - 25ல் காதி துணி உற்பத்தி ரூ.3783 கோடியாகவும் விற்பனை ரூ.7145.61 கோடியாகவும் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் அதிகளவு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் 1.30 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்ற நிலையில் தற்போது வேலை வாய்ப்பு பெற்றோர் 1.94 கோடியாக அதிகரித்துள்ளனர் என்றார்.
09-Apr-2025