சட்ட வாசகர் கருத்தரங்கு
மதுரை: மதுரையில் சட்டக்கல்லுாரி மாணவர்களின் வாசகர் வட்ட கருத்தரங்கம் நடந்தது. தென்மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் மணிகண்டன் தலைமை வகித்தார். மதுரை உயர்நீதி மன்ற கிளை வழக்கறிஞர் கருப்பசாமி பாண்டியன், 'இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள்' குறித்து பேசினார்.திரளான சட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் தருண் தொகுத்து வழங்கினார். வாசகர் வட்ட மதுரை பொறுப்பாளர் பிரியங்கா நன்றி கூறினார்.