மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
14-Oct-2025
மதுரை: தமிழகஅரசு பொது நுாலகத்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தமிழ் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் குணசேகரன் வேலை அறிக்கை, பொருளாளர் ராஜகுரு வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தனர். தேர்தல் கால வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊர்ப்புற நுாலகர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் குறித்து வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமுன்னாள் தலைவர் பிரபாகரன், மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி, முன்னாள் செயலாளர் இளங்கோவன் பங்கேற்றனர்.
14-Oct-2025