உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எல்.ஐ.சி., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் பென்சன் புதுப்பிப்பு, மருத்துவ காப்பீட்டில் முன்னேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி., ஓய்வூதியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். எல்.ஐ.சி., ஓய்வூதியர்களுக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். 1977 ஆக., முன்பு பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும். 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மீனாட்சி சுந்தரம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி