| ADDED : ஜன 09, 2024 05:38 AM
மதுரை : மதுரையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 15 கல்வி ஒன்றியங்களில் நடந்தது.மாவட்டத்தில் இத்திட்டத்தில் 15 வயதுக்கு மேல் முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 16,984 பேருக்கு எழுத்தறிவித்தல், எண்ணறிவித்தல், வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 934 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மதுரை செனாய்நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வடக்கு கல்வி ஒன்றியம் சார்பில் நடந்த பயிற்சியை சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்து பேசுகையில், தன்னார்வலர்கள் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது. ஆசிரியர்கள் கற்பிப்பது போல் எழுத்தறிவித்தல், எண்ணறிவித்தல் பணியும் அறப்பணியே. அதை மதுரை மாவட்டம் சிறப்பாக செய்கிறது. அதற்கு காரணமான அனைத்து தன்னார்வலர்களும் போற்றக்கூடியவர்கள் என்றார்.இதுபோல் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் கிழக்கு ஒன்றியம் சார்பில்நடந்த பயிற்சியையும் கார்த்திகா பார்வையிட்டார். அலங்காநல்லுார்,வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட மையங்களில் நடந்த பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் பார்வையிட்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஏற்பாடு செய்தனர்.