உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உள்ளூர் காளைகள் புறக்கணிப்பு உரிமையாளர்கள் முற்றுகை

உள்ளூர் காளைகள் புறக்கணிப்பு உரிமையாளர்கள் முற்றுகை

மதுரை ; மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளை புறக்கணித்ததாக கூறி மாடுபிடிவீரர்கள், காளை உரிமையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டத்தில் இன்று (ஜன., 15 ) அவனியாபுரம், நாளை (ஜன., 16) பாலமேடு, நாளை மறுநாள் (ஜன., 17) அலங்காநல்லுாரில் ஜல்லிகட்டு போட்டிகள் நடக்கின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஜன., 10 ல் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். நேற்று மதியம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு வேலைகளை ஆய்வு செய்ய அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி உள்ளிட்டோர் சென்றனர்.இந்நிலையில் உள்ளூரைச் சேர்ந்த காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் கிடைக்கவில்லை எனக்கூறி முற்றுகையில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் அவர்களுடன் பேசியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை