உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு விடிவு

மதுரையில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு விடிவு

மதுரை: மதுரையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த சட்டசபை உறுதிமொழிக்குழுவிடம் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் தளபதி(மதுரை வடக்கு), மோகன் (சென்னை அண்ணாநகர்), அரவிந்த்ரமேஷ் (சோழிங்கநல்லுார்), பூமிநாதன் (மதுரை தெற்கு), அருள் (சேலம் மேற்கு) ஆகியோர் அடங்கிய சட்டசபை உறுதிமொழி குழு நேற்று மதுரை வந்தது. அவர்களுடன் கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, போலீஸ் கமிஷனர் லோகநாதன் சென்றனர்.மதுரை சுற்றுலா மாளிகையில் புதிய கட்டடம் கட்டுவது குறித்து ஆய்வு செய்த குழு, அரசு மருத்துவமனையின் உயர்சிகிச்சைப் பிரிவுக்கு சென்றனர். சுவர்களில் 5 ஆண்டுக்குள் காரை பெயர்ந்தது குறித்து குழுவினர் கேள்வி எழுப்பினர். சி.டி.,ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மையத்தில் கட்டணத்தை தவிர கூடுதலாக பணம் கேட்கின்றனரா என்று விசாரித்தனர்.தொடர்ந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் சென்ற குழுவினர் பஸ்ஸ்டாண்ட் கட்டடங்கள் திறக்கப்படாதது குறித்து கேட்டனர். கமிஷனர் சித்ரா கூறுகையில், 'ஒருமாதத்திற்கு முன்புதான் உள்ளூர் திட்டக்குழும சான்றுவந்தது. மின்சார ஒயரிங் பணிமுடிந்த சான்று வழங்கியபின் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என பதிலளித்தார். போலீஸ் கன்ட்ரோல் ரூம், கழிப்பறை, தாய்பாலுாட்டும் அறைகளை பார்வையிட்ட குழுவினர் மின்விளக்கு வசதி ஏற்படுத்தும்படி கூறினர்.பின்னர் மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு சென்ற குழு, அங்கு தீவிபத்தில் பாதித்த வீரவசந்தராயர் மண்டபத்தில் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்தது. தொடர்ந்து அங்குள்ள தீயணைப்பு நிலையம், திருப்பரங்குன்றம் கோயில் போலீஸ் ஸ்டேஷனிற்கு கட்டடம் கட்டும் இடத்தை ஆய்வு செய்தனர். திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரூ.57 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை டிசம்பருக்குள் முடிக்க அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை