| ADDED : ஆக 02, 2011 01:20 AM
மதுரை : அ.தி.மு.க., அரசை கண்டித்து, மதுரையில் நேற்று தி.மு.க.,வினர் அனுமதியின்றி ஸ்காட் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போடுவதாக அறிவித்தனர். புறநகர் பகுதியில் இருந்து வருபவர்களை கைது செய்ய, நகர் எல்லையில் உள்ள 14 செக்போஸ்ட்களிலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நிறுத்தப்பட்டனர். பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து புறப்பட்டவர்கள் ரயில்வே ஸ்டேஷன் எதிரே கைது செய்யப்பட்டனர். இதே பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றவர்களும் கைதாயினர். ஸ்காட் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற புறநகர் செயலாளர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முத்துராமலிங்கம், தமிழரசி, செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., கவுஸ்பாட்ஷா மற்றும் கவுன்சிலர்கள் உட்பட நகரின் பல்வேறு பகுதியில் மொத்தம் 1050 பேர் கைது செய்யப்பட்டனர். புறநகரில் 12 இடங்களில் போராட்டத்தில் ஈடுபடமுயன்ற 3 பெண்கள் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மதியம் விடுவிக்கப்பட்டனர்.