உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாக்டர்களுக்கு பட்டமளிப்பு விழா

டாக்டர்களுக்கு பட்டமளிப்பு விழா

மதுரை : உயிர்காப்பு சிகிச்சை துறையில் முதுகலை பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு பட்டமளிப்பு விழா மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் நடந்தது. இந்திய மருத்துவ சங்க செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார். காமன்வெல்த் நாடுகளில் உள்ள மருத்துவர்களின் கூட்டமைப்பு தலைவர் அருள்ராஜ் பட்டம் வழங்கினார். அவர் பேசுகையில், ''இன்றைய சூழ்நிலையில் சாலை விபத்து, மாரடைப்பு, மூச்சுத் திணறல், பக்கவாதம், ரத்தவாந்தி போன்ற உயிர் பாதிப்புள்ள நோய்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். பாதிப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் டாக்டர்களை அணுகினால் உயிரை காப்பாற்றலாம். இவ்வாறு பாதிப்படைந்த நோயாளிகளை காப்பாற்றுவதில் டாக்டர்களுக்கு தனிப்பட்ட அறிவும், திறமையும் தேவை.இதை கருத்தில் கொண்டே மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் உயிர்காப்பு சிகிச்சை துறையில் முதுகலை பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது,'' என்றார்.விழாவில் வாஷிங்டன் பல்கலை விரிவுரையாளர் நடேஷாபவல், இந்திய டாக்டர்கள் சங்க முன்னாள் தலைவர் விஜயகுமார், டாக்டர் ஜார்ஜ்ஆப்ரகாம், ஆஸ்பத்திரி மருத்துவ இயக்குனர்கள் ராஜசேகரன், கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை