மேலும் செய்திகள்
எஸ்.ஐ மீது கம்பியால் தாக்கிய கல்லூரி மாணவர்
9 hour(s) ago
மதுரை- சினிமா- 06.03
15 hour(s) ago
அஜித்குமார் மரண வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
15 hour(s) ago
மதுரை : மதுரை மேம்பாலங்களில் விபத்தில் சிக்குபவர்கள் கீழே தவறி விழாதவாறும், மக்கள் எளிதில் குதித்து கடக்காதவாறும் தடுப்புச்சுவர்களை உயர்த்தி கட்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 11 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. சமீபகாலமாக இப்பாலங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. நேற்று முன் தினம் மதுரா கோட்ஸ் பாலத்தில் வேகமாக சென்ற ஆட்டோ மோதி, டூவீலரில் வந்த கோச்சடை கோவிந்தரராஜன்,40 என்பவர் தடுப்புச் சுவரை தாண்டி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து இறந்தார். சில வாரங்களுக்கு முன், அரசு பாலிடெக்னிக் பாலத்திலும் இதேபோன்று விபத்து நடந்ததில் ஒருவர் பலியானார். நகருக்குள் அதிகபட்சம் 30 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விதி, பாலத்தில் செல்லும் போதும் பொருந்தும். பாலத்தில் முந்திச் செல்லக்கூடாது என்ற விதியையும் பின்பற்றுவதில்லை.
இதுவே விபத்துக்கு வழிவகுக்கிறது. தடுப்புச் சுவரின் உயரம் குறைவாக இருப்பதால் மக்கள் எளிதில் பாலத்தின் மைய பகுதியில் குதித்து ரோட்டை கடப்பதால் விபத்து ஏற்படுகிறது. விபத்திற்கான காரணம் : போலீசார் கூறுகையில், ''பாலங்களில் விபத்து ஏற்படுவதற்கு அரசு டவுன் பஸ்கள் ஒரு காரணம். தாழ்தள பஸ்கள்கூட பாலங்களில் ஏற திணறுகின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் பின்தொடர்ந்து செல்ல விரும்பாமல், 'ஓவர்டேக்' செய்யும்போது, எதிரே வரும் வாகனத்துடன் மோதுகின்றன,'' என்றனர்.நேற்று முன் தினம் நடந்த விபத்தில் கோவிந்தராஜன் கீழே விழுந்தது இறந்ததற்கு காரணம், மூன்றரை அடி உயரமுள்ள தடுப்புச் சுவர். இச்சுவர் ஆறடி வரை உயர்த்தி கட்டியிருந்தால், கோவிந்தராஜன் தூக்கி வீசப்படாமல் தடுக்கப்பட்டு காயத்துடன் உயிர்தப்பி இருப்பார். உயர்த்தி கட்டினால் என்ன? நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது : இந்தியன் ரோடு காங்கிரஸ் நிர்ணயித்த அளவுபடி (மூன்றரை அடி) தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது. இன்னும் சில அடி உயரம் உயர்த்தி கட்டும்போது, அதற்கேற்ப பாலத்தின் தாங்குத்திறனை அதிகரிக்க வேண்டும். வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது, பாலத்தில் இருந்து கீழே விழாமல் இருக்கவே குறிப்பிட்ட உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. இதன் உயரத்தை அதிகரிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும், என்றனர்.
9 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago