உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாவட்ட வனவிலங்கு ஆர்வலர்கள் நிம்மதி பெருமூச்சு: அனிமல் பாஸ் ஓவர் பாலப்பணி தீவிரம்

மதுரை மாவட்ட வனவிலங்கு ஆர்வலர்கள் நிம்மதி பெருமூச்சு: அனிமல் பாஸ் ஓவர் பாலப்பணி தீவிரம்

வாடிப்பட்டி: மதுரை கடவூரை தொடர்ந்து பூச்சம்பட்டியிலும் வனவிலங்குகள் ரோட்டை கடந்து செல்ல 'அனிமல் பாஸ் ஓவர்' பாலப்பணிகள்நடக்கின்றன.கடவூர் அருகே அழகர்மலை வனங்களில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இங்கு ரோடு அமைக்கும் பணியின் ஒருபகுதியாக 'அனிமல் பாஸ் ஓவர்' பாலப்பணிகள் நடந்தன. தற்போது மதுரை -- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி சந்திப்பு முதல் சிட்டம்பட்டி வரை அவுட்டர் ரிங் ரோடு நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை பூச்சம்பட்டி பகுதியில் இரு மலைகளின் நடுவே கடந்து செல்கிறது.இப்பகுதியில் வன விலங்குகளை காக்க ஒரு மலைக்கும் மற்றொரு மலைக்கும் இடையே 210 மீட்டர் துாரத்திற்கு 'அனிமல் பாஸ் ஓவர்' பாலம் அமைக்க வன, தேசிய நெடுஞ்சாலை துறையினர் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தனர். இதன் மூலம் வன விலங்குகள் வாகனங்களில் சிக்கி பலியாகாமல் பாலம் வழியாக வனம், மலைகளுக்கு இடையே கடந்து செல்ல முடியும்.கடந்த ஆண்டு செப்டம்பரில் பாலத்திற்கான பணிகள் துவங்கின. இதன் ஒருபகுதியாக வனத்துறை மலை பகுதி பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் பாதுகாப்பாக ரோட்டை கடக்க நடக்கும் இப்பணியால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள வனவிலங்கு ஆர்வலர்கள், இப்பகுதியில் அதிகளவில் வசிக்கும் மயில்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ