உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை கீழவாசல் சி.எஸ்.ஐ., சர்ச்சில் பிரார்த்தனையின் போது மோதல்; விஸ்வரூபம் எடுத்த நிர்வாக பிரச்னை

மதுரை கீழவாசல் சி.எஸ்.ஐ., சர்ச்சில் பிரார்த்தனையின் போது மோதல்; விஸ்வரூபம் எடுத்த நிர்வாக பிரச்னை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை கீழவாசல் சி.எஸ்.ஐ., சர்ச்சில் பிரார்த்தனையின்போது நிர்வாக பிரச்னை காரணமாக இரு தரப்பினர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த சர்ச்சில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை தலைமை போதகர் ராஜா ஸ்டாலின் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. அப்போது சிலர் சர்ச்சின் வரவு, செலவு கணக்கு விபரங்களை கேட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக ஆபிரகாம் என்பவர் புகாரில் ஆல்வீன், துரைசிங்கம், பாபு மீது விளக்குத்துாண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னணி என்ன

போலீசார் கூறியதாவது: சர்ச் நிர்வாகத்தை கவனிக்க இரு ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நடந்தது. அதில் தலைமை போதகர் ராஜா ஸ்டாலின் தரப்பினர் வெற்றி பெற்றனர். இதை முந்தைய நிர்வாகத்தில் பொருளாளராக இருந்த துரைசிங் உள்ளிட்டோர் விரும்பவில்லை. அடிக்கடி ராஜா ஸ்டாலின் தரப்பு குறித்து போலீஸ் ஸ்டேஷனிற்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் துரைசிங் தரப்பினர் மனு அளித்து வந்தனர். நிர்வாக ரீதியான பிரச்னை என்பதால் இருதரப்பையும் அடிக்கடி அழைத்து விசாரித்து சமரசம் செய்ய முயற்சித்தோம். அது பலன் அளிக்காத நிலையில் நேற்றுமுன்தினம் பிரார்த்தனையின் போது பிரச்னை ஏற்படாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. எனினும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதுதொடர்பாக ராஜா ஸ்டாலின் தரப்பின் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. துரைசிங் தரப்பின் புகாரை பெற்றுக்கொண்டதற்கு ரசீது(சி.எஸ்.ஆர்.,) வழங்கி உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
நவ 05, 2024 17:23

இங்கே அடிச்சிக்காதீங்க. போய் அமெரிக்கா, கனடாவில் அடிச்சிக்கோங்க. உலக அளவில் பேர் கிடைக்கும்.


Rasheel
நவ 05, 2024 11:49

பூசாரிக்கு ஒரு ரூபாய் போடாதவன் எல்லாம் சனாதன மதத்தை கேலி செய்வான். ஆனால் ஆப்ரஹாமிய இடங்களில் நடக்கும் பண புழக்கம், சாதி சண்டை பற்றி இங்கே எழுத முடியாது. அவ்வளவு கேவலம்.


Ganesh vaidyanathan
நவ 07, 2024 14:57

? ...


Sampath Kumar
நவ 05, 2024 11:30

எல்லா மத வலி பட்டு தளத்திலும் ஏதாவது பிரச்னை வந்து கொண்டுதான் உள்ளது என்ன காரணம் சாதி ???/ அல்லது பதவி வெறி ??//


lana
நவ 05, 2024 10:45

இந்த வீனா போன அரசாங்கம் இவைகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் என்ன


ஆரூர் ரங்
நவ 05, 2024 10:44

அடப் பாவமே. கர்த்தர் கூறியது போல ஒரு கன்னத்தில் பளார் விட்டவர்களுக்கு மறு கன்னத்தைக் காட்டியிருந்தால் வன்முறை நடந்திருக்காதே.


Ramakrishnan Sathyanarayanan
நவ 05, 2024 10:42

இங்கு மாநில அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கிறதோ அத்தகைய நடவடிக்கையையே ஹிந்து கோயில்களில் பிரச்சினை ஏற்பட்டால் எடுக்க வேண்டும் என்பது தானே மதச் சார்பற்ற தன்மையாக இருக்க முடியும் என்று எவருக்குமே தோன்றுமல்லவா


முக்கிய வீடியோ